Monday, December 27, 2010

                                                   கல்வி என்பதுதான் என்ன? ...
         

              நாம் புரிந்து  கொண்ட கல்வி என்பது  டீக்கடையில் டீ வாங்க டோக்கன் பயன்படுவதுபோல வேலை வாங்க பயன்படும் டோக்கன் போலத்தான் இருக்கிறது.  நம் சராசரி பெற்றோருக்கு   தன்  பிள்ளைகளை ஒரு பந்தயக்குதிரைகலாகத்தான்  பார்க்க முடிகிறதே அன்றி வேறெதுவுமாக இல்லை. நாம் கற்கும் பள்ளிக்கல்வியோ அல்லது கல்லூரிக்கல்வியோ பின்னர் நாம் கற்க உள்ள எத்தனையோ விசயங்களுக்கு அகர முதலியாக மட்டும் இருக்கும் என்பது ஏன் விளங்கவில்லை?
 
                           சிலருக்கு கால்பந்தட்டமோ ,நடனமோ அல்லது  இசைக்கும்  திறனோ இருப்பது போல நன்றாக படித்து  மார்க் மட்டுமே  எடுப்பதும் ஒரு திறமைதான் .ஆனால் இங்கே கல்வி என்பதுதான் வேலை வாங்க பயன் படும் டோக்கன் என்று ஆன பிறகு நம்ம ஆட்கள் அத பொறுக்க பாடுபடுவது தான் வேதனையான  விஷயம்.

தன்  பிள்ளைக்கு எது பிடிக்கும் என்று கூட தெரியாமல் தன் ஆசையை  இவர்கள் வழியாக பூர்த்தி செய்ய நினைக்கும் ஒரு கொடூர அறிவின்மையை என்ன சொல்வது? முன்பு சொன்னது போலவே சிலருக்கு சில திறமைகள் இல்லாமல் போகலாம்.ஆனால் சிலருக்கு கூட எந்த திறமையும் இல்லாதவர்களாக இருக்க முடியாது.

             நம்ம சராசரி பெற்றோர் தன் பிள்ளையை டாக்டர் அல்லது எஞ்சினியர் ஆக மட்டுமே ஆக்க முயற்சி செய்வது ஏன் என்றால் அது தான்  சீக்கிரம் பணம் சம்பாதிக்க  ஒரே வழி அன்றி  எதுவும் இல்லை .

                நாம பயங்கரமா நாளேடுகளின் முதல் பக்கங்களை அலங்கரித்து கேக் ஊட்டி கொண்டாடிய அந்த பள்ளி பிள்ளைகளை பின்னாளில் சாதாரண டாக்டர் மற்றும் என்ஜினீயர் ஆக மட்டுமே காணக்கிடைப்பது ஏன்? ஏன் அவர்களிடம் இருந்து ஒரு பெரிய விஞ்ஞானியோ ,இலக்கியவாதியோ இல்லாமல் போனது ஏன்?
அந்த பிரியாக்களும், ஜாஸ்மின் களும் ஏன் அந்த இரு பணிகளில் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
               அது தான் நாம் கற்ற கல்வியை தவறாக புரிந்து கொண்டதன் விழைவு .பள்ளியில் படிக்கும் வயதில் விளையாட்டு ,சினிமா  அறிமுகமான அளவு  ஏன் நல்ல புத்தகங்கள் அறிமுகமாகவில்லை.   வாசிப்பின் திறம் இவர்களிடம் உணரப்படாமல் போனதற்கு என்ன காரணம்.

    அவர்கள் பந்தயக்குதிரைகளாக பயணம் செய்தார்கள் அன்றி வேறோன்றுமில்லை.புத்தகங்களும் நாம் எவ்வாறு பள்ளிக்கல்வியை ஒரு குறிப்பிட்ட சிலபசைக்கொண்டு வடிவமைக்கிறோமோ அது போலதான் குழந்தைகளுக்கு புத்தகங்கள் பற்றிய அறிவினை கொண்டு வர வேண்டும்.

    அது ஒன்றுதான் அவர்களை தன்னைப்பற்றி மட்டுமன்றி சிந்திப்பதல்லாமல் ஒரு மேம்பட்ட சமுதாயம் பற்றியும் சிந்திக்க செய்யும்.




                                               அன்புடன் ........
                                                                 பவுல்