Tuesday, December 6, 2011

*Try to obey the Traffic Rules.
*Pay your tax on time
*Don’t make the people waiting for long time for you.
* Do not hurt anybody with your words.

இது எதையுமே பண்ணாம பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா போட்டோ அல்லது சண்டே மட்டுமே மாஸ் அட்டென்ட் பண்ணியோ சொர்க்கத்துக்கு போகலாம்னு ஐடியா பண்ணா.....

கடவுள் ஒன்னாருவாய(1.50 )மூஞ்சில விட்டேருஞ்சு கீழ தள்ளுவார்.
---வாழ்த்துக்கள் அன்புடன் paul  

Saturday, February 5, 2011

நம்ம மதுரைப்பக்கம் ஒரு விஷயம் மிகவும் நகைச்சுவையாக சொல்வார்கள்.ஒரு சின்ன வாண்டுகிட்ட கிட்ட கூட வரும் பதில் பெரிய ஆராய்ச்சி பண்ணும் அளவிற்கு போவது ஒரு ஆச்சர்யம்.ஏண்டா இப்டியே ஊற சுத்திக்கிட்டு கிடக்குற
படிக்க மாட்டியா? அப்டின்னு கேட்டா,"படிப்போம்ல" நு சொல்லும்.
 
  இந்த பதில் நிகழ் காலமா அல்லது எதிர்காலமா அப்டின்னு யோசிக்கற மாதிரி ஒரு வித்தியாச பதில் அது.அவன் சொன்ன அந்த செய்தி சரியா இல்ல தவறா அப்டின்னு சொல்ல முடியாத ஒரு வினோத பதில் அது. இப்படி ஒரு statement சரியா அல்லது தவறா(true  or  false )னு  சொல்ல முடியாத விசயங்களை ஆங்கிலத்தில் paradox   என்பார்கள். paradox  என்பது ஒரு செய்தியை சரியா அல்லது தவறா என சொல்ல முடியாத நிலை.
        

     உதாரணமாக ஒரு செய்தியை ஆங்கிலத்தில் காண்போம். "this sentence  is  false " இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் .இந்த செய்தி  சரியா அல்லது தவறா எனக்கூற முடியாத ஒன்று. சரி என்று சொன்னால் அந்த செய்தி தவறாக மாறிவிடும். அல்லது தவறு என்று சொன்னால் அந்த செய்தி சரியான ஒன்று என்று ஆகிவிடும் .இந்த நிலை தான் paradox  என்று சொல்லப்படுகிறது . நாம் உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு காண்போம்.தலையில் முடி அதிகம் உள்ளவர்கள் இதனை சரியா இல்லை தவறா என யோசிக்கலாம்.


a lier says "everything i say is lie"
Nobody goes to that restaurant; it's too crowded.
Don't go near the water 'til you have learned how to swim.
The man who wrote such a stupid sentence can not write at all.
If you get this message, call me, and if you don't get it, don't call.
 
 
 

 

Sunday, January 2, 2011

ada

               அட நம்ம தலைவர்களுக்கு தான் நம்ம மேல  எவ்வளவு  அக்கறை பாருங்க .சட்டமன்ற தேர்தல் வர்றதுனால நம்ம நாட்டுக்கு நாந்தான் நல்லது பண்ணுவேன் அப்டின்னு போட்டி போட்டு வரத்துடிக்கிறாங்க.

   ஏங்க  நீங்க  ஜெயிச்சு வர்றதே உங்க  கடமைய  செய்யறதுக்குத்தான்.  இதுல நாங்க  அத பண்ணோம் இத பண்ணோம் அப்டின்னு சொல்றீங்களே இது உங்களுக்கே ஓவரா இல்லையா?.  அத எல்லாம் பண்றதுக்குதான பட்டதாரியில இருந்து பாமரன் வரைக்கும் ஒட்டு போடுறான். எங்கயாவது ஒரு வாத்தியாரோ ,ஐ ஏ எஸ்,ஐ பி எஸ் ,ஏன் வீதி கூட்டுற யாராவது ,நான் வீதியெல்லாம் கூட்டி சுத்தம் பண்ணுனேன் அப்டின்னு சொல்றாங்களா? அது அவங்க செய்ய வேண்டிய   கடமை. அதுக்குத்தான அவங்க இருக்காங்க?
     ஆனா நீங்க மட்டும் என்னடான்னா, பண்ண வேண்டியத பண்ணாம ,பண்ணுறதுக்கும் மூக்கால அழுதுட்டு இப்டி நான் அத பண்ணோம் இத பண்ணோம் அப்டின்னு சொன்னா என்னங்க நியாயம்.
ஒரு சாதாரண ஆளுக்கு மக்களுக்கு நல்லது பண்ணனும் அப்டின்னு நெனச்சா ,பண்றதுக்கு பணமோ பதவியோ இல்ல .ஆனா நாம தேர்ந்தெடுத்த இந்த ஆளுங்களுக்கு அது ரெண்டுமே இருக்கு. 

     இப்டி நல்லது பண்ண சான்ஸ் கிடச்சும் பண்ணாம அடுத்தவன குறை சொல்லி அறிக்கை வெளியிடுறது,தேவை இல்லாம மாநாடு போட்டு பிரியாணி போடறது, (செஞ்ச  சாதனைகள்(!) அப்டின்னு யாரையாவது பாட்டு கம்போஸ் பண்ணி டிவி ல போட்டு அடிக்கறதுன்னு எங்கய்ய இப்டி ஏங்க பணத்த காலி பண்றீங்க?
      
                 

Monday, December 27, 2010

                                                   கல்வி என்பதுதான் என்ன? ...
         

              நாம் புரிந்து  கொண்ட கல்வி என்பது  டீக்கடையில் டீ வாங்க டோக்கன் பயன்படுவதுபோல வேலை வாங்க பயன்படும் டோக்கன் போலத்தான் இருக்கிறது.  நம் சராசரி பெற்றோருக்கு   தன்  பிள்ளைகளை ஒரு பந்தயக்குதிரைகலாகத்தான்  பார்க்க முடிகிறதே அன்றி வேறெதுவுமாக இல்லை. நாம் கற்கும் பள்ளிக்கல்வியோ அல்லது கல்லூரிக்கல்வியோ பின்னர் நாம் கற்க உள்ள எத்தனையோ விசயங்களுக்கு அகர முதலியாக மட்டும் இருக்கும் என்பது ஏன் விளங்கவில்லை?
 
                           சிலருக்கு கால்பந்தட்டமோ ,நடனமோ அல்லது  இசைக்கும்  திறனோ இருப்பது போல நன்றாக படித்து  மார்க் மட்டுமே  எடுப்பதும் ஒரு திறமைதான் .ஆனால் இங்கே கல்வி என்பதுதான் வேலை வாங்க பயன் படும் டோக்கன் என்று ஆன பிறகு நம்ம ஆட்கள் அத பொறுக்க பாடுபடுவது தான் வேதனையான  விஷயம்.

தன்  பிள்ளைக்கு எது பிடிக்கும் என்று கூட தெரியாமல் தன் ஆசையை  இவர்கள் வழியாக பூர்த்தி செய்ய நினைக்கும் ஒரு கொடூர அறிவின்மையை என்ன சொல்வது? முன்பு சொன்னது போலவே சிலருக்கு சில திறமைகள் இல்லாமல் போகலாம்.ஆனால் சிலருக்கு கூட எந்த திறமையும் இல்லாதவர்களாக இருக்க முடியாது.

             நம்ம சராசரி பெற்றோர் தன் பிள்ளையை டாக்டர் அல்லது எஞ்சினியர் ஆக மட்டுமே ஆக்க முயற்சி செய்வது ஏன் என்றால் அது தான்  சீக்கிரம் பணம் சம்பாதிக்க  ஒரே வழி அன்றி  எதுவும் இல்லை .

                நாம பயங்கரமா நாளேடுகளின் முதல் பக்கங்களை அலங்கரித்து கேக் ஊட்டி கொண்டாடிய அந்த பள்ளி பிள்ளைகளை பின்னாளில் சாதாரண டாக்டர் மற்றும் என்ஜினீயர் ஆக மட்டுமே காணக்கிடைப்பது ஏன்? ஏன் அவர்களிடம் இருந்து ஒரு பெரிய விஞ்ஞானியோ ,இலக்கியவாதியோ இல்லாமல் போனது ஏன்?
அந்த பிரியாக்களும், ஜாஸ்மின் களும் ஏன் அந்த இரு பணிகளில் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
               அது தான் நாம் கற்ற கல்வியை தவறாக புரிந்து கொண்டதன் விழைவு .பள்ளியில் படிக்கும் வயதில் விளையாட்டு ,சினிமா  அறிமுகமான அளவு  ஏன் நல்ல புத்தகங்கள் அறிமுகமாகவில்லை.   வாசிப்பின் திறம் இவர்களிடம் உணரப்படாமல் போனதற்கு என்ன காரணம்.

    அவர்கள் பந்தயக்குதிரைகளாக பயணம் செய்தார்கள் அன்றி வேறோன்றுமில்லை.புத்தகங்களும் நாம் எவ்வாறு பள்ளிக்கல்வியை ஒரு குறிப்பிட்ட சிலபசைக்கொண்டு வடிவமைக்கிறோமோ அது போலதான் குழந்தைகளுக்கு புத்தகங்கள் பற்றிய அறிவினை கொண்டு வர வேண்டும்.

    அது ஒன்றுதான் அவர்களை தன்னைப்பற்றி மட்டுமன்றி சிந்திப்பதல்லாமல் ஒரு மேம்பட்ட சமுதாயம் பற்றியும் சிந்திக்க செய்யும்.




                                               அன்புடன் ........
                                                                 பவுல்